இந்துக்களால்தான் நம் தேசத்தின் ஜனநாயகம் காக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
போபாலில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய கிரி ராஜ் சிங், இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால்தான் இந்தியாவில் ஜனநாயகம் காக்கப்பட்டு வருவதாக கூறினார். இந்துக்களின் பெரும்பான்மை குறைந்தால், ஜனநாயகம், நாட்டின் முன்னேற்றம், சமூக அமைதி உள்ளிட்டவை ஆபத்தான நிலைக்கு சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம், அசாம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் 54 மாவட்டங்களில் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்துள்ளது. இந்த மாவட்டங்களில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மக்கள் தொகை மாற்றம் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஆகும். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், ஆனால் பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.