டிரெண்டிங்

டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றியுள்ளனர்: நாஞ்சில் சம்பத் சாடல்

டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றியுள்ளனர்: நாஞ்சில் சம்பத் சாடல்

Rasus

டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையைத்தான் ஈபிஎஸ் அணி நிறைவேற்றியுள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க அம்மா அணியின் கூட்டத்தில், தினகரனின் அறிவிப்புகள் கட்சியை எந்தவிதத்திலும்  கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதே கட்சியின் சட்டத்துக்கு விரோத‌மானது என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாள்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், "ஆட்சியும், அதிகாரமும் இருக்கிறது என்கிற திமிரில் இந்த அயோக்கியத்தமான முடிவை தானாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கட்சியின் பொதுக்குழுவில் முக்கிய அங்கமாக இருக்கும் யாரும் அந்த அரங்கில் இல்லை. தன்னிச்சையாகவே ஒரு பொதுக்கூட்டத்தை கூட்டி டெல்லி எஜமானார்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த தீர்மானம் ஒரு நாடகம்தான். இந்த முடிவு எங்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாதது" என தெரிவித்துள்ளார்.