டிரெண்டிங்

பட்டைய கிளப்பிய ஸ்ரேயாஸ் ஐயர்: கொல்கத்தாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த டெல்லி

பட்டைய கிளப்பிய ஸ்ரேயாஸ் ஐயர்: கொல்கத்தாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த டெல்லி

webteam

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவுக்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களம் இறங்கினர். ஆரம்பத்திலேயே சரவெடியாக வெடித்தனர். இதையடுத்து 16 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுத்து தவான் ஆட்டமிழக்க, அதையடுத்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் கூட்டணி சேர்ந்தார்.

பிரித்வி ஷா 41 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸ் அடித்து 66 ரன்களை குவித்தார். அவரைத்தொடர்ந்து பண்ட் 17 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார். ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் நின்று ஸ்ரேயாஸ் ஐயர் பட்டையை கிளப்பினார். 38 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 228 ரன்கள் எடுத்துள்ளது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை கொல்கத்தா அணிக்கு டெல்லி அணி நிர்ணயித்துள்ளது. கொல்கத்தா பவுலிங்கை பொருத்தவரை வருண் சக்கரவர்த்தி, கமலேஷ் நாகர்கொடி தலா ஒரு விக்கெட்டையும் ரஸல் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.