டெல்லி கேப்பிடல் அணியின் துவக்க ஆட்டக்காரர் ப்ரிதிவ் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2022 ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில், டெல்லி கேபிட்டல் அணியின் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட், ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், கீப்பர்-பேட்டர் டிம் சீஃபர்ட் மற்றும் பிளேயிங் லெவனில் பங்கேற்காத மூன்று உறுப்பினர்கள் உட்பட அணியின் ஆறு உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து டெல்லி அணியின் வலைப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், அணியின் அனைத்து உறுப்பினர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் ப்ரிதிவ் ஷா கடும் காய்ச்சல் காரணமாக மும்பை உள்ள மருத்துவமனையில் டெல்லி கேப்பிடல் அணியின் துவக்க ஆட்டக்காரர் ப்ரிதிவ் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.