டிரெண்டிங்

போயஸ் கார்டனில் தீபா: போலீஸ் குவிப்பு

போயஸ் கார்டனில் தீபா: போலீஸ் குவிப்பு

Rasus

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, போயஸ் கார்டனுக்கு திடீரென சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு இன்று காலை அவரின் அண்ணன் மகள் தீபா திடீரென வந்தார். அப்போது, டிடிவி தினகரன் தரப்பினர் அவரை உள்ளே விடாமல் தடுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தீபாவின் ஆதரவாளர்கள் அங்கு பாதுகாப்பு நின்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தீபாவை உள்ளே அனுமதிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
போலீசார் தடுப்புகளை அமைத்தும் அவர்களை தடுத்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய தீபா, தன் சகோதரர் தீபக் அழைப்பின் பேரில்தான் போயஸ் கார்டன் வந்தாகக் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்த தீபக் அழைத்தார் என்றும் அதனால்தான் வந்தேன் என்று தெரிவித்து தீபா அங்கேயே நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்முறையாக, தற்போது தான் போயஸ் கார்டன் சென்றுள்ளார் தீபா.