டிரெண்டிங்

ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு

rajakannan

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

படிவம் 26-ஐ நிரப்பாமல் விட்டதால் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். வேட்புமனுவில் வேட்பாளரின் சொத்துக்கள், வழக்குகள் குறித்து தெரிவிக்க படிவம்-26 உள்ளது. முக்கிய விவரங்களை அளிக்க தவறியதால் ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று பா.ஜ.க., வேட்பாளர் கரு.நாகராஜன், நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

இதனையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அதில் தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டது. நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்பே தீபா தனது மனு நிராகரிக்கப்படலாம் என குறிப்பிட்டிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.