நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒன்றாம் தேதியன்று நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள 5-ஆவது அலகில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் நிகழ்விடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் கடந்த 3ஆம் தேதி ஒரு பொறியாளரும், 5-ஆம் தேதி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், நேற்று மட்டும் ஒரு பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.