டிரெண்டிங்

நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை

நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை

Rasus

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது.

தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகமாகி வரும் நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்டோபர் 11-ஆம் தேதி கூடுகிறது. இதில் அரசு ஊழியர்களின் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இதுதவிர தமிழகத்தில் பிரதான பிரச்னையாக டெங்கு உருவெடுத்துள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு ஏற்கனவே பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும், அதுகுறித்தும் இதில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து இதில் ஆலோசனை செய்ய வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.