சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.