டிரெண்டிங்

’’அழிக்கப்படுவதற்காகவே வளர்க்கப்படும் சிங்கங்கள்’’ - வனவிலங்கு அதிகாரி ’ஷாக்’ ட்வீட்

Sinekadhara

காடுகள் அழிய அழிய பலவித வன விலங்குகளும், உயிரினங்களும் அழிந்துகொண்டே வருகின்றன. மேலும் வன விலங்குகளுக்கான பாதுகாப்பு குறைந்துவருகிறது என்பதை அவ்வப்போது வெளிவரும் விலங்குகளின் அழிவு மற்றும் இனப்பெருக்க குறைவு பற்றிய செய்திகளிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

தற்போது வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு சிங்கக்குட்டிகள் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சிங்கங்களின் அழிவுபற்றிய தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘’சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்த அழகிய குட்டிகளின் எதிர்காலம் அழிந்து போகக்கூடும். தென்னாப்பிரிக்காவில் மட்டும் 1000க்கும் அதிகமான சிங்கங்கள் சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. அவை எலும்புகள் மற்றும் பிற உடல் பாகங்களுக்காக கொலை செய்யப்படுகின்றன. அவற்றில் பல நமது ஆசிய நாடுகளில் அவற்றின் சுகாதார நலன்களுக்காக விற்கப்படுகின்றன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.