டிரெண்டிங்

கடலூர்: நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கிய அதிகாரி... வீடியோ வெளியானதால் பரபரப்பு

கடலூர்: நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கிய அதிகாரி... வீடியோ வெளியானதால் பரபரப்பு

kaleelrahman

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையை கொள்முதல் செய்ய 56 ரூபாய் கையூட்டு வாங்கிய வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பெரிய நற்குணம் கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து குறுவை சாகுபடி செய்த நெற்பயிர்களை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் 40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையை கொள்முதல் செய்ய குமார் என்ற விவசாயியிடம் 54 ரூபாய் கையூட் வாங்கினார் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் ராஜாராம்.

இதை விவசாயிகள் தங்கள் கைபேசியில் வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளனர் அதில் 258 மூட்டையை கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு ரூபாய் 54 வீதம் 13 ,900 ரூபாயை கட்டாய கையூட்டாக வாங்கியவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.


இதுபோல் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தும் வெளிப்படையாக தகவல் தெரிவிக்க மறுக்கின்றனர் காரணம் கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பார்கள், இதனால் மழையில் நனைந்து நெல் மணிகள் நாசம் ஆகும் என்ற பயத்தில் கேட்கும் லஞ்ச பணத்தை உடனடியாக கொடுத்து தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யும் அவலநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுகுறித்து புதிய தலைமுறை தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வருவதும் அதன் பேரில் நடவடிக்கை எடுப்பதும் தொடர்கதையாகவே உள்ளது,