ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற நூலிழையில் வாய்ப்பு உள்ளது. எனவே எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. சென்னை அணி, இன்றைய போட்டியிலும் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் நடப்பு தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகள் பட்டியலில் முதல் அணியாக வெளியேறிவிடும்.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
சிஎஸ்கே: சாம் குர்ரான், ஃபாஃப் டு பிளெசிஸ், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் / என் ஜெகதீசன், எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், ஷார்துல் தாகூர், பியூஷ் சாவ்லா /, ஜோஷ் ஹேசில்வுட்
மும்பை: ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா