டிரெண்டிங்

இந்தியா வர விசா கிடைத்தது: சி.எஸ்.கே வீரர் மொயின் அலி இன்று மாலை மும்பை வருகிறார்; ஆனால்?

EllusamyKarthik

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் மொயின் அலி 15-வது ஐபிஎல் சீசனில் விளையாட உள்ளார். இருந்தும் அவருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் இந்தியா பயணிப்பதில் சிக்கல் எழுந்தது. இது குறித்து சென்னை அணியின் தலைமை நிர்வாக செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூட பேசி இருந்தார். 

இந்த சூழலில் அவருக்கு இந்திய அரசு விசா வழங்கியுள்ளது. அதையடுத்து அவர் இன்று மாலை (மார்ச் 24) இந்தியா வருகிறார். இருந்தாலும் கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாட்கள் கட்டாய தனிமையில் அவர் இருக்க வேண்டியுள்ளது அதற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி 28 வாக்கில் அவர் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளார். இருந்தும் சுமார் மூன்று வார காலம் அவருக்கும் விசா கிடைப்பதில் சிக்கல் இருந்துள்ளது. இதனை அவரது தந்தை முனீர் அலி உறுதி செய்துள்ளார். 

“மொயின் அலி இன்று மாலை மும்பை வருகிறார். தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய காரணத்தால் அவர் முதல் போட்டியில் விளையாட மாட்டார். இருந்தாலும் அவர் இந்தியா வந்து அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார் காசி விஸ்வநாதன். 

சென்னை அணிக்காக கடந்த சீசனில் 357 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் அவர்.