டிரெண்டிங்

"தோனி இருக்கிறார்; நம்பிக்கையை இழக்க வேண்டாம்" இர்பான் பதான் !

"தோனி இருக்கிறார்; நம்பிக்கையை இழக்க வேண்டாம்" இர்பான் பதான் !

jagadeesh

தோனி இருப்பதால் சிஎஸ்கேவுக்கு இன்னும் கூட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மேலும் குறைந்தது. இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இர்பான் பதான் பேசியுள்ளார்.

அதில் "யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மீண்டுவிடலாம். எனவே சிஎஸ்கே இப்போது கடைசி இடத்தில் இருப்பதற்காக வருத்தப்பட தேவையில்லை. சரியான திட்டமிடல் இருந்தால் மீண்டும் வெற்றிப் பெற முடியும். அந்த அணிக்காக நான் 2015 ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறேன். சிஎஸ்கேவுக்கு தன்னுடைய வீரர்களை பயன்படுத்த நன்றாகவே தெரியும். ஆனால் இவையெல்லாம் வீரர்களின் கையில்தான் இருக்கிறது" என்றார் இர்பான் பதான்.

மேலும் "இத்தனை ஆண்டுகளாக சிஎஸ்கே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் இப்போது சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோல் இல்லை என்பது பின்னடைவுதான். ஆனால் அவர்களுக்கு சிறந்த கேப்டனாக தோனி இருக்கிறார். அணி இப்போது இருக்கும் நிலையிலிருந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல தோனியால் முடியும். அதுதான் சிஎஸ்கேவுக்கு பலம்" என தெரிவித்துள்ளார் இர்பான் பதான்.