டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: 45 குடும்பங்களுக்கு அரிசி வழங்கி உதவும் சென்னை தம்பதி

துளிர்க்கும் நம்பிக்கை: 45 குடும்பங்களுக்கு அரிசி வழங்கி உதவும் சென்னை தம்பதி

நிவேதா ஜெகராஜா

புதியதலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' நிகழ்ச்சி மூலம் 45 பேருக்கு உதவுவதற்காக தலா 5 கிலோ எடை கொண்ட 45 அரிசி பைகளை வழங்கியுள்ளனர், சென்னை தாம்பரம் கிழக்கு பகுதியை சேர்ந்த ரேனுகோபால், மல்லீஷ்வரி தம்பதி.

கொரோனா பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளையும், அவர்களுக்கு உதவி செய்ய முன்வருவோரையும் இணைக்கும் பாலமாக புதியதலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி இருந்து வருகிறது.

அந்தவகையில், துளிர்க்கும் நம்பிக்கை முன்னெடுப்புக்கு, தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் உதவி கேட்டும், ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்தவண்ணமும் உள்ளனர். இந்த அறிவிப்பைப் பார்த்த சென்னை தாம்பரம் கிழக்கு பகுதியை சேர்ந்த ரேனுகோபால், தன்னால் முயன்ற உதவியைச் செய்ய முன்வந்திருக்கிறார்.

இதேபோல், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்.பி.ஸ்வாமி என்பவர், 20 ஏழைக் குடும்பங்களுக்குத் தேவைப்படும் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளார்.

இவற்றை உரியவர்களுக்கு வழங்கும் பணியை புதியதலைமுறை குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்திருக்கும் ஒரு உதவிக்கான அழைப்பு இது. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'