டிரெண்டிங்

இணைப்பால் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற முடியாது - திவாகரன்

இணைப்பால் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற முடியாது - திவாகரன்

webteam

அணிகள் இணைப்பின் மூலம் கட்சியையோ, ஆட்சியையோ காப்பாற்ற முடியாது என்று சசிகலாவின் சகோதர் திவாகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “ஜெயலலிதா ஆன்மா ஒருபோதும் சசிகலாவை ஒதுக்க சொல்லாது. என்னிடம் 8 எம்.எல்.ஏ.க்கள் பேசியுள்ளார்கள். டி.டி.வி.க்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

 ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகிய மூன்று பேருடைய அழுத்தத்திற்கு 122 எம்.எல்.ஏ.க்கள் பலிகடா ஆகியுள்ளனர்.

 அவர்கள் துரோகம் செய்துவிட்டதாகத்தான் கடைக்கோடி தொண்டர்கள் நினைக்கிறார்கள். 

9 எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாக இருக்கும் பொழுது, 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்துள்ள டி.டி.வி. ஒரு அணியாக செயல்படக் கூடாதா? தொண்டர்கள் தினகரனோடு இருக்கிறார்கள்.

 கட்சி அவர்களோடு இருப்பதாக அவர்கள் நினைத்தால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். இது கடைந்தெடுத்த துரோகம்.

 சசிகலாவின் சீராய்வு மனு என்னவானது என்று கூட யாரும் கேட்கவில்லை. நட்டாற்றில் விட்டுவிட்டனர்” என்று கூறினார்.

மேலும், “ஒபிஎஸ் நிர்பந்தத்தினால் பதவி விலகிறார் என்பதை விட பதுங்கி பாய்ந்தார் என்றே சொல்ல வேண்டும். தற்போதைய சூழலில் நாங்கள் நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது. அணிகள் இணைந்தில் மகிழ்ச்சி. ஆனால் அனைவரையும் இணைக்காமல் பதவிக்காக தாங்கள் விரும்பியபடி நடந்து கொள்கின்றனர். பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதனால் சசிகலாவை யாரும் நீக்க முடியாது” என்றும் திவாகரன் கூறினார்.