டிரெண்டிங்

பூந்தமல்லியில் கள்ள ஓட்டுகள் ! கட்சிகள் சரமாரி புகார்

பூந்தமல்லியில் கள்ள ஓட்டுகள் ! கட்சிகள் சரமாரி புகார்

webteam

பூந்தமல்லி அருகே கன்னப்பாளையம் ஊராட்சியில் பதிவான வாக்குகளை விட கூடுதலாக கள்ள ஓட்டுகளை போட்டதாக அதிமுகவினரால் பரபரப்பு ஏறபட்டது.

பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட  கண்ணப்பாளையம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி எண் 195 ல், பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதில் மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் திமுக பூத் ஏஜெண்ட் வெளியே வந்ததாகவும், அப்போது அங்கு வந்த அமமுகவினர் உள்ளே சென்று பார்த்தபோது, அதிமுகவை சேர்ந்தவர் கள்ள ஓட்டு போட்டுக்கொண்டு இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அங்கு திமுக மற்றும் அமமுகவினர் அதிகளவில் ஒன்று திரண்டு முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே அமமுகவினர் இச்சம்பவம் குறித்து கூறுகையில்,  இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 1117 வாக்குகள் உள்ளது. அதில் 858 வாக்குகள் பதிவானதாக அனைத்து கட்சியினரும் முடிவு செய்தனர். பின்னர் உள்ளே சென்ற அதிமுகவை சேர்ந்த நபர் இடைத்தேர்தலில் 37 வாக்குகளும், நாடாளுமன்ற தொகுதிக்கு 27 வாக்குகளும் கூடுதலாக பதிவாகி உள்ளது. எனவே இந்த வாக்குச்சாவடிக்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கூறி வாக்குப்பதிவு எந்திரங்களை எடுக்க விடாமல் அமமுகவினர் தடுத்தனர்.

இந்த நிலையில் அங்கு போலீசார், தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னா மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்து திமுக மற்றும் அமமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சோதனை முடிந்த பின் அதிகாரிகள் கூறுகையில், பூத்தில் இருந்த அரசு ஊழியர் உதவியுடன் கள்ள ஓட்டு போடப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஆனால் எவ்வளவு ஓட்டுகள் போடப்பட்டது என தெரியவில்லை என மழுப்பலான பதிலை கூறினர்.

மேலும் இதுகுறித்து புகார் மனு வாங்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மாவட்ட ஆச்சியரிடம் கொடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த வாக்குச்சாவடி மையத்திற்கு மறு தேர்தல் நடக்குமா? அல்லது கூடுதலாக போடப்பட்ட வாக்குகள் கழிக்கப்பட்டு பதிவான வாக்குகள் மட்டும் என்னப்படுமா என்பது பின்னர் தெரியவரும்.  இந்த செயலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து விட்டு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து சென்றனர். கள்ள ஓட்டு போட அரசு அதிகாரிகளே உடந்தையாக இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.