டிரெண்டிங்

கொரோனா கால மகத்துவர்: ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விவசாய கூலித் தொழிலாளி

கொரோனா கால மகத்துவர்: ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விவசாய கூலித் தொழிலாளி

kaleelrahman

மயிலாடுதுறையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு விவசாய கூலித் தொழிலாளி தினசரி உணவு வழங்கி வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்த தாண்டவபுரத்தை அடுத்த சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி தீபன்ராஜ். இவர், ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்கள், மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு வழங்கி பலதரப்பு மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

பட்டயப் படிப்பு முடித்து சென்னை ஹுன்டாய் கம்பெனியில் வேலை செய்துவந்த தீபன்ராஜ் கடந்த ஆண்டு ஊரடங்கால் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டும் வருகிறார். மேலும் கூலி வேலைக்கு சென்று தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை, ஏளிய மக்களுக்கு உணவு, முகக்கவசம், குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவற்றை சேவை மனப்பான்மையோடு வழங்கி வருகிறார்.

கேரளாவில் கூடை முனையும் தொழில் செய்துவந்த தன் தந்தை புயலில் சிக்கி தவித்தபோது கேரள மக்கள் உதவி செய்து காப்பாற்றியதால், ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும், சென்னையில் வேலை பார்த்தபோது கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டி உதவி செய்துள்ளதாகவும் கூறும் தீபன்ராஜ், கூலி வேலை செய்து 1 ஆண்டாக தான் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.