டிரெண்டிங்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துக: ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துக: ஸ்டாலின்

webteam

பெட்ரோல் டீசல் விலையை தினசரி உயர்த்தும் முறையை மாற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் அதிக சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாகவும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடியை அவர் வலியுறுத்தியுள்ளார்.