டிரெண்டிங்

நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ் தலை இல்லாத உடலுக்கு சமம்- ஈவிகேஎஸ் இளங்கோவன்

நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ் தலை இல்லாத உடலுக்கு சமம்- ஈவிகேஎஸ் இளங்கோவன்

Veeramani

நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், தலை இல்லாத உடலுக்கு சமம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், தலை இல்லாத உடலுக்கு சமம். மதவாத சக்திகளை எதிர்ப்பதற்கு நமது நாட்டிற்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் இன்றும் அடிப்படையாக இருப்பது நேரு குடும்பத்தின் அர்ப்பணிப்பாகும். நேரு குடும்பத்தின் தலைமையைப்பற்றி கேள்வி எழுப்பும் சிலர் முதலில் அவர்களுடைய தகுதியை ஆராய்ந்துபார்க்க வேண்டும். சோனியாகாந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், இராகுல்காந்தி அவர்கள் செயல்தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வழிகாட்ட வேண்டும் என்பதே என்னைப்போன்ற காங்கிரஸ் தொண்டர்கள் விருப்பமாகும். தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் நேரு குடும்பத்தின் தன்னலமற்ற சேவையே நமது மாபெரும் நாட்டையும்,கட்சியையும் வழிநடத்த முடியும்” என்றார்