டிரெண்டிங்

2022 தேர்தலில் 135 இடங்களை பிடிப்போம்: ராகுல் நம்பிக்கை

2022 தேர்தலில் 135 இடங்களை பிடிப்போம்: ராகுல் நம்பிக்கை

rajakannan

2022-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியில் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

நடந்த முடிந்த தேர்தலில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றியது. கடந்த தேர்தலை விட 16 இடங்கள் அதிகம் என்ற போது ஆட்சி அமைக்க முயாமல் போனது. ஒரு சுயேட்சை வேட்பாளர் ஆதரவு அளித்துள்ளதால் பாஜக எண்ணிக்கை 100-ஆக உயர்ந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பழங்குடியினர் கட்சி 2 தொகுதிகள், சுயேட்சை வேட்பாளர் ஜிக்னேஷ் உடன் சேர்த்து 80 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் வலிமையாக உள்ளது. 

இந்நிலையில், அகமதாபாத் நகரில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய ராகுல் காந்தி அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றும் என்று கூறினார். பாஜகவும், பிரதமர் மோடியும் அவமதிப்பு பிரச்சாரம் செய்ததாக அவர் சாடினார்.