டிரெண்டிங்

மோசமான வானிலை: ராகுல் நிகழ்ச்சிகள் ரத்து

மோசமான வானிலை: ராகுல் நிகழ்ச்சிகள் ரத்து

webteam

மோசமான வானிலைக் காரணமாக ராகுல் காந்தி இன்று மட்டும்  நாளை கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தில் வரும் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகவே காங்கிரஸ் கட்சியின் துணைத்தலவர் ராகுல் காந்தி குஜராத் மோர்பி மற்றும் சுரேந்தரா நகர் பகுதிகளில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் அங்கு மோசமான வானிலை நிலவி வருவதால் நாளை நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மேற்கொண்டு அந்நிகழ்ச்சிகள் வருகின்ற 7ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பகத்தில் வெளியாகியுள்ளது.