டிரெண்டிங்

ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு ராகுல்தான் காரணம்: காங்கிரஸ்

rajakannan

பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதற்கு ராகுல் காந்திதான் முக்கிய காரணம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

அசாம் மாநிலம் குவாஹாத்தியில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் 178 பொருட்கள் மீதான வரி விதிப்பு 28 சதவீதத்தில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது. 50 பொருட்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி உள்ளது. ஜிஎஸ்டிக்கு எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாகவும், குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டும் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதற்கு ராகுல் காந்திதான் முக்கிய காரணம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான அசோக் கெலாட் கூறியுள்ளார். குஜராத் பரப்புரையில் இதுகுறித்து ராகுல் பேசி வருவதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறியுள்ள அவர், குஜராத்தில் பாஜக தோல்வியைத் தழுவும் என்ற அச்சம் காரணமாகவே, ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதாக கூறினார்.

இதனிடையே, குஜராத் மாநிலம் சபர்கந்தா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரையின் போது பேசிய ராகுல் காந்தி, ஜிஎஸ்டி மூலம் நாட்டின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளதாக சாடினார். அதற்கு மாற்றாக, சில தொழிலதிபர்களின் முதுகெலும்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.