டிரெண்டிங்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிச.16ல் தேர்தல்!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிச.16ல் தேர்தல்!

webteam

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16ல் தேர்தல் நடைபெறும் என காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். கட்சிக்கு ராகுல் காந்தியை தலைவராக்க மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். ராகுல் காந்தி இப்போது துணை தலைவர். அவர் தலைவராக, காங்கிரஸ் காரிய கமிட்டி முறையான ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்படி டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடியது. இதில், ராகுல் காந்தியை தலைவராக தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தலைவர் பதவிக்கான வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 1ல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4. வேட்பு மனு வாபஸ் பெற டிசம்பர் 11-ம் தேதி கடைசி நாள். 16-ம் தேதி தேர்தல். முடிவுகள் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.