டிரெண்டிங்

தமிழக காங். தலைவராக திருநாவுக்கரசு நீடிப்பார்: ராகுல் அறிவிப்பு

தமிழக காங். தலைவராக திருநாவுக்கரசு நீடிப்பார்: ராகுல் அறிவிப்பு

rajakannan

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி கடந்த மாதம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ராகுல் காந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. குஜராத் மாநிலத்தில் கடந்த தேர்தலை விட அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும், ஆட்சியை பிடித்திருந்தால் ராகுல் காந்தி தலைவரானதற்கு பரிசாக அமைந்திருக்கும். 

ராகுல் காந்தி தலைவர் பொறுப்பேற்ற பிறகு கட்சி நிர்வாகிகளை மாற்றம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், அனைத்து மாநிலத் தலைவர்களையும் அதே பொறுப்பில் நீடிப்பார்கள் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜனார்தன திவேதி பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்கள் அதே பதவியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசுவும் அதே பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா நியமிக்கப்பட்டுள்ளார். பரேஷ் தனானி குஜராத் சட்டப்பேரவை தலைவரக நியமிக்கப்பட்டுள்ளார்.