டிரெண்டிங்

காங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி மரணம்

காங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி மரணம்

webteam

மத்திய, முன்னாள் அமைச்சரும் மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 72. 

2008-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொல்கத்தாவில் இருந்து மால்டாவுக்கு செல்லும்போது அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். மாரடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோமா நிலைக்குச் சென்றார். தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த அவர், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று பகல் 12.10 மணிக்கு உயிரிழந்தார். இத்தகவலை அவரது மனைவி தீபா உறுதிப்படுத்தினார்.

’அவரை காப்பாற்ற எவ்வளவோ போராடினோம். ஜெர்மனிக்கு கொண்டு சென்று ஸ்டெம்செல் தெரபி சிகிச்சை செய்தோம். அந்த சிகிச்சையும் அவர் உடல்நிலையை குணமாக்கவில்லை’ என்றார் தீபா.

மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தாஸ்முன்ஷி, 1999-ல் இருந்து 2009-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகவும் பின்னர் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும் இருந்தார்.