டிரெண்டிங்

தெலங்கானாவில் போட்டியிட அசாருதீனுக்கு அழைப்பு

தெலங்கானாவில் போட்டியிட அசாருதீனுக்கு அழைப்பு

webteam

தெலங்கானாவில் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. 
தெலங்கானாவில் தீவிர அரசியல் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என அசாருதீன் கூறியதைத் தொடர்ந்து, தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
தெலங்கானாவில் இருந்து எம்.பி., அல்லது எம்.எல்.ஏ. இவற்றில் எதை விரும்பினாலும் அதில் அசாருதீன் போட்டியிடலாம் என உத்தம் குமார் கூறியுள்ளார். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த அசாருதீன் 2009 மக்களைத் தேர்தவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அவரின் சொந்த மாநிலத்தில் போட்டியிட காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது.