டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: லாரி ஓட்டுநருக்கு உதவிய காங்கிரஸ் நிர்வாகி

துளிர்க்கும் நம்பிக்கை: லாரி ஓட்டுநருக்கு உதவிய காங்கிரஸ் நிர்வாகி

நிவேதா ஜெகராஜா

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் பொதுமுடக்கத்தால் வருவாய் இழந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்திற்கு புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் உதவி கிட்டியது.

லாரி ஓட்டுநரான ரகுபதி, பொதுமுடக்கத்தால் வேலையின்றி 2 குழந்தைகள்,மனைவியுடன் உணவிற்கே சிரமப்படுவது தெரியவந்தது. புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம், ரகுபதியின் நிலையை அறிந்த காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர் - மாலதி தேவி தம்பதி அவர்களுக்கு உதவ முன்வந்தனர். ரகுபதியின் வீட்டிற்கு சென்ற அவர்கள் அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கையில் ஒன்றுக்கு செய்யப்பட்டிருக்கும் சிறு உதவி இது. இந்த எளியவர்களை கரை சேர்க்க எங்கள் பணியில், உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'