டிரெண்டிங்

முரசொலி பவள விழாவுக்கு வைகோ வாழ்த்து

முரசொலி பவள விழாவுக்கு வைகோ வாழ்த்து

webteam

சென்னையில் நடைபெற உள்ள முரசொலியின் பவள விழா சிறப்பாக நடைபெற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “கருணாநிதி தன்னுடைய மூத்த பிள்ளையாகக் கருதிய முரசொலி, நூற்றாண்டு விழா காணும் அளவுக்கு சிறப்பாக நடக்கட்டும். கருணாநிதியின் எழுத்துகள் எனும் அமுதத்தை அள்ளி அள்ளி தந்த முரசொலியின் பவள விழா சிறப்பாக நடக்கட்டும். நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

முன்னதாக, நீட் தேர்வுக்காக திமுக நடத்திய மனித சங்கிலி போராட்டத்தை நியாயமான போராட்டம் என்று தனது வாழ்த்துகளைக் கூறினார் என்பது நினைவுகூறத்தக்கது.