டிரெண்டிங்

முதுகுளத்தூர்: திமுகவினர் இடையே மோதல்- 2 பேருக்கு அரிவாள் வெட்டு

முதுகுளத்தூர்: திமுகவினர் இடையே மோதல்- 2 பேருக்கு அரிவாள் வெட்டு

webteam

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் அரிவாளால் தாக்கப்பட்டனர். 

திமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று முதுகளுத்தூர் தேர்தல் அதிகாரி மணிமாறனிடம்  வேட்புமனுவை தாக்கல் செய்து வந்து கொண்டிருந்தார்.

அவரை முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகம் தரப்பினரும், மாணவரணி துணை அமைப்பாளர் ஹரி தரப்பினரும் வரவேற்று வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சண்முகம் தரப்பைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் அரிவாளால் தாக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இரண்டு பேரும் சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை பார்த்திபனூரில் வரவேற்புச் சென்றபோது, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஹரி தரப்பு கார் கண்ணாடியை சண்முகம் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.