டிரெண்டிங்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

rajakannan

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், மக்களின் பிரச்னைகள் மற்றும் ஆர்.கே.நகர் தேர்தலை எப்படி அணுகுவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் திமுக வேட்பாளர் மருது கணேஷ்க்கு ஆதரவு அளிப்பதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர்.

ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் தங்களது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி இன்னும் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.