மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், வாட்ஸ் அப் மூலம் வாக்கு சேகரித்து வரும் காணொலி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் வாக்காளர்களை கவரும் வகையில், பல்வேறு வகைகளில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்காலத்துக்கு ஏற்ப சமூக ஊடகங்கள் மூலம் தீவிர வாக்கு சேகரிப்பை முன்னெடுத்திருக்கிறார் மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன்.
வாட்ஸ் அப் மூலம் பரப்புரை மேற்கொண்டு வரும் வெங்கடேசன், மதுரை மக்களுக்கு தரமான கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மக்களவையில் குரல் கொடுக்கப் போவதாகவும், எனவே தமக்கு வாக்காளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, வாட்ஸ் அப்பில் காணொலி வெளியிட்டுள்ளார். இந்த காணொலி வாட்ஸ் அப்பில் இயங்கும் பல்வேறு குழுக்கள் மூலம் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.