கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டாலும், பாரதிய ஜனதாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் கூறினார்.
டெல்லியில் உள்ள அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை தெற்கு தொகுதியை பொருத்தமட்டில் கடந்த தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்ட வானதி சீனிவாசன் 36 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றதை சுட்டிக்காட்டினார். தற்பொழுது அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க.வை சேர்ந்தவர் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அதிமுகவுடன் பா.ஜ.க.கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்குவதால், யார் போட்டியிட்டாலும் கோவை தெற்கு தொகுதியில் தங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என எல்.முருகன் தெரிவித்தார்.