தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் காந்தி பார்க் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
கோவையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தி பார்க் பகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர்அலிகான் நடைபயிற்சி மேற்கொண்டவாரே பரப்புரை மேற்கொண்டார். காந்தி பார்க்கில் பூப்பந்து விளையாடியும், உடற்பயிற்சி மேற்கொண்டும், பொது மக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டும் மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார்.
பூங்காவில் பொதுமக்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் பூங்காவை சுற்றி அங்கும் இங்குமாக நடந்து அனைவரையும் கவரும் விதமாக நடந்து கொண்டார். அவருக்கே உரித்தான பாணியில் நக்கல் நையாண்டி செய்து பரப்புரை மேற்கொண்டார். பின்னர் பூங்காவில் இருந்த எருக்கம்பூ செடியை பிடித்து பாஸா? பெயிலா? என்று விளையாடினார். அப்போது கமலஹாசன் பாஸ், பிக் பாஸ், எல்லாரும் பாஸ், என்று நக்கலடித்தார். அதன் பின் பூங்காவின் வெளியே வந்து மூலிகை சூப் கடையில் இருந்த மக்களிடம் பேசினார்.