டிரெண்டிங்

அமைச்சர்கள் அறையில் முதலமைச்சர் படம்... அடுத்த பரபரப்பு

அமைச்சர்கள் அறையில் முதலமைச்சர் படம்... அடுத்த பரபரப்பு

Rasus

அனைத்து தமிழக அமைச்சர்களின் அறையிலும் முதலமைச்சர் பழனிசாமி படம் வைக்கப்பட்டுள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மறுபடியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன் பிணையில் வந்ததில் இருந்து பலவேறு பரபரப்பான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்த போதும் அமைச்சர்கள் அறையில் முதலமைச்சர் படம் இடம்பெறாமல் தான் இருந்தது. இது விமர்சனத்திற்கும் உள்ளானது. இதுவரை முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா படம் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது அனைத்து தமிழக அமைச்சர்களின் அறையிலும் திடீரென முதலமைச்சர் பழனிசாமி படம் வைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில், கைதான டிடிவி தினகரன் தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். கட்சிப் பணிகளை மீண்டும் தொடர்வேன் என அவர் அறிவித்திருக்கிறார். ஆனால் தமிழக அமைச்சரான ஜெயக்குமாரோ, டிடிவி கட்சியிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இதனால் டிடிவி-க்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் இடையேயான விரிசல் இருந்தது வெளியே தெரியவந்தது. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சில எம்எல்ஏ-க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவசர அவசரமாக முதலமைச்சர் பழனிசாமியின் புகைப்படம் தமிழக அமைச்சர்களின் அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்றார். அவரின் புகைப்படத்தை அமைச்சர்கள் அறையில் வைப்பது என்பது வழக்கமான நடைமுறை தான் என்று கூறியிருக்கிறார்.