சிவகங்கையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மதுரை சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீனாட்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்தார்.
காலை 6.30 மணிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த முதலமைச்சர் பழனிசாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் செய்தபிறகு முதலமைச்சர் பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கருப்பணன், சேவூர் ராமச்சந்திரன், ஆர்பி உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதலமைச்சர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.