குஜராத், இமாச்சலில் பாஜக வெற்றி பெற்றதையொட்டி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடே எதிர்பார்த்த குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றிமுகத்தில் உள்ளது. குஜராத்திலும், இமாச்சலப் பிரதேசத்திலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான தொகுதிகளை விட பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.