டிரெண்டிங்

ஓபிஎஸ் கூறியதில் உண்மை இல்லை: முதலமைச்சர் பழனிசாமி

ஓபிஎஸ் கூறியதில் உண்மை இல்லை: முதலமைச்சர் பழனிசாமி

webteam

பிரதமர் மோடி அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டதாக துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதில் உண்மை இல்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாராத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. அத்துடன் 15 ஆண்டுகள் இந்த தீர்ப்பு செல்லும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம். எனக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடு கிடையாது. அவர் அதிமுகவிற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். நாங்கள் இரண்டு பேரும் இணைந்து அதிமுகவை வளர்க்கிறோம். ஒரு சிறிய வார்த்தை கூறினாலும் அது பெரிதாக்கப்படுகிறது. அதுபோன்று தான் பன்னீர்செல்வம் கூறிய வார்த்தையும் பெரிதாக்கப்பட்டுள்ளது. அதில் உண்மை இல்லை. தமிழகத்தில் பயங்கரவாதம் பெருகிவிட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது வடிகட்டிய பொய். இந்தியாவிலேயே அமைதிப்பூங்காவா விளங்குவது தமிழ்நாடு தான். மக்களுக்கு சேவை செய்வதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்காக பாடுபட்டது அதிமுகவும், ஜெயலலிதாவும் தான். துரோகம் செய்தது திமுக. ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறினார்.