முதலமைச்சர் பழனிசாமி அதிமுக எம்எல்ஏக்களை இன்று நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இதனால் அனைத்து எம்எல்ஏக்களும் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாவட்ட வாரியாக எம்எல்ஏக்களை முதல்வர் சந்திப்பார் என்றும் அப்போது அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் உடன் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினகரன் தரப்பு தங்களுக்கு 19 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை விரைவில் 40 வரை உயரும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறி முதல்வருக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நிர்பந்தம் தந்து வருகின்றன. இந்த பின்னணியில் இன்று அதிமுக எம்எல்ஏக்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.