டிரெண்டிங்

கவலையுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்!

webteam

கைத்தறி கூட்டுறவுத்துறையில் ஊக்கத்தொகை பெற விதிக்கப்பட்டிருக்கும் இரண்டு நிபந்தனைகளைத் திரும்பப் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்,

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 3 ஆண்டுகளுக்கு மட்டுமே கூட்டுறவு கைத்தறி சங்கங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்ற நிபந்தனையால், கைத்தறித் தொழில் முடங்கும் என்று கவலை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இத்தகைய கட்டுப்பாட்டால் கைத்தறிப் பொருட்களின் விற்பனை பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளார். 

ஆண்டுக்கு 30 லட்ச ரூபாய்க்கு மேல் ஈட்டும் கைத்தறி சங்கங்களுக்கு ஊக்கத்தொகை கிடையாது என்ற நிபந்தனையும், கைத்தறித் தொழிலை முடக்கிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கான 2 நிபந்தனைகளையும் திரும்பப் பெறும்படி ஜவுளித்துறைக்கு அறிவுறுத்துமாறு கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.