கச்சத்தீவு விவகாரத்தில் அரிச்சுவடியை படிக்காமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பற்றி விமர்சிக்கக்கூடாது என திமுகவின் துணைப் பொதுசெயலாளர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக திமுகவின் துணைப் பொதுசெயலாளர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசை துணிச்சலுடன் எதிர்த்து மாநில உரிமைகளுக்காக போராடியது திமுக எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தையும், தமிழர்களின் சுயமரியாதையையும், குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதித்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மாநில உரிமைகள் பற்றி பேசவோ, திமுகவை விமர்சிக்கவோ எந்தத் தகுதியும் இல்லை என அவர் விமர்சித்துள்ளார். தமிழகம் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு அனைத்திலும் சீர்குலைந்து நிற்பதற்கு அதிமுக ஆட்சியே முழுமுதல் காரணம் என்றும் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.