ஆட்சியில் இல்லாதவர்கள் அழகாக தேர்தல் அறிக்கையை வெளியிடுவதால் ஒரு பயனுமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நெல்லை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மனோஜ் பாண்டியனை ஆதரித்து வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, தாங்கள்தான் ஆட்சியில் இருப்பதாகவும், அதனால், தங்களின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ள திட்டங்கள்தான் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின், வெறும் விமர்சனங்களை மட்டும் முன்வைப்பதாகவும், திமுக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள் என்பதை ஒருபோதும் சொல்வதில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், பல பகுதிகளில் திமுகவினர் பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.