டிரெண்டிங்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்வர் பழனிசாமி குடும்பத்தினர்: விஜயபாஸ்கர்

Rasus

அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், முதலமைச்சர் பழனிசாமியின் குடும்பத்தினர் கூட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “அரசு மருத்துவமனை மீது மாவட்ட ஆட்சித் தலைவர் உள்பட அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன் முதலமைச்சரின் மகன் உள்பட குடும்பத்தினர் அனைவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். அமைச்சர்கள், தா.பாண்டியன், குமரி ஆனந்தன் உள்பட அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளனர். பணம் இல்லாதவர்கள்தான் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்ற நிலைமாறி, எல்லோருக்கும் அரசு மருத்துவமனையில் உயர்ந்த சிகிச்சை அளிக்கப்படும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் வந்துள்ளது. இது ஒரு நல்ல வரவேற்கத்தக்க விஷயம்” என்றார்.