டிரெண்டிங்

அதிமுகவுடன் சசிகலா சேர நினைத்தால்... - முதல்வர் பழனிசாமியின் பதில்

அதிமுகவுடன் சசிகலா சேர நினைத்தால்... - முதல்வர் பழனிசாமியின் பதில்

webteam

சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அதிமுக நிலைப்பாடு குறித்த கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ராமநாதபுரத்தில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்தது‌ என தெரிவித்தார்.

அப்போது சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்து அதிமுகவுடன் இணைந்து செயல்பட நினைத்தால் ஏற்பீர்களா ? என்ற கேள்வி செய்தியாளர்கள் தரப்பில் இருந்து முதலமைச்சரிடம் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதலளிக்க மறுத்த முதலமைச்சர், “தற்போது இந்தக் கேள்வி எழ வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் ராமநாதபுரத்தின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், வளர்ச்சிப் பணிகளை பார்வையிடவும் இங்கு வந்திருக்கிறோம்” என்றார்.