டிரெண்டிங்

’அபராதம் கட்டுங்க..’ - பேட்டை தூக்கி வீசிய கெயிலுக்கு ஃபைன் போட்ட ஐபிஎல்..!

jagadeesh

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியின்போது 99 ரன்களில் அவுட்டானதால் ஆத்திரத்தில் பேட்டை வீசி எறிந்த கிறிஸ் கெயிலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிப்பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் இந்த ஆட்டத்தில் 99 ரன்களை குவித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெயில், 99 ரன்கள் சேர்த்திருந்தபோது ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு பேசிய கெயில் "1000 சிக்ஸர்களை அடித்தது ஒரு ரெக்கார்டாக உள்ளது. 41 வயதிலும் பவர் ஹிட் செய்வதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். அதற்கு நன்றி சொல்ல வேண்டும். நான் சதம் அடிக்க வேண்டுமே என விரும்பியவர்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னிக்கவும். நான் இன்று அதை மிஸ் செய்து விட்டேன். இருந்தாலும் என் மனதில் அதனை சதமாகவே பார்க்கிறேன்” என்றால்.

ஆனால் 99 ரன்களில் அவுட்டானதால் ஏமாற்றமடைந்த கெயில் தன்னுடைய பேட்டை தூக்கி வீசினார். பின்பு ஜோப்ரா ஆர்ச்சருக்கு கை குலுக்கிவிட்டு சென்றார். இதையடுத்து விதிமுறைகளை மீறியதற்காக கெயிலுக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 10 சதவிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.