டிரெண்டிங்

காருக்குள் சிக்கிய 2 குழந்தைகள் - லாக் ஆனதால் மூச்சு திணறி உயிரிழந்த சோகம்

காருக்குள் சிக்கிய 2 குழந்தைகள் - லாக் ஆனதால் மூச்சு திணறி உயிரிழந்த சோகம்

Sinekadhara

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீப மங்களம் பகுதியில் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் குழந்தைகள் ராஜி(7 வயது), வனிதா (4 வயது). இருவரும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடிய போது கார் கதவு லாக் ஆனதால் திறக்கமுடியாமல் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி மணலூர்பேட்டை போலீஸார் விசாரித்ததில், ‘’இதற்கு முன்பே குழந்தைகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கார் உரிமையாளர் ராஜா என்பவரும் அதே தெருவில்தான் வசித்துவருகிறார். காரில் ஏதோ கோளாறு இருந்ததால் அதை கடந்த ஒன்றரை வருடங்களாக பயன்படுத்தவில்லை.


குழந்தைகள் காருக்குள் விளையாடும்போது சைல்டு லாக் மெக்கானிசத்தால் கார் கதவு தானே பூட்டிக்கொண்டதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உள்ளேயே இருந்துள்ளனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களால் சத்தமாக யாரையும் உதவிக்குக் கூட அழைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சைல்டு லாக் என்பது காரில் வழங்கபப்டும் ஒரு பாதுகாப்பு முறை. குழந்தைகள் உள்ளே இருக்கும்போது யாராவது வெளியே இருந்துமட்டும்தான் திறக்கமுடியும். பாதுகாப்புக்காக கார்களில் வழங்கப்பட்ட வசதி, இன்று இரண்டு குழந்தைகளின் உயிரையே பறித்துவிட்டது.

மதியம் வெளியே விளையாடச் சென்ற குழந்தைகள் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் குடும்பத்தினர் வெளியே சென்று குழந்தைகளைத் தேடியுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகுதான் குழந்தைகள் காரில் அசைவின்றி கிடப்பது தெரியவந்துள்ளது’’ என கூறியுள்ளனர்.