டிரெண்டிங்

“பேசி பேசி தொண்டை மங்கிப் போச்சு, அதான் பேச்சு வரல” -வேதாரண்யம் பரப்புரையில் முதல்வர்

“பேசி பேசி தொண்டை மங்கிப் போச்சு, அதான் பேச்சு வரல” -வேதாரண்யம் பரப்புரையில் முதல்வர்

kaleelrahman

வேதாரண்யத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட வந்த முதல்வரின் தொண்டை மங்கியதால் பேச முடியாமல் சிறிது நேரம் சிரமப்பட்டார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் கைத்தறித்துறை அமைச்சருமான ஓ.எஸ்.மணியனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நண்பகல் 12 மணிக்கு வேதாரண்யம் வந்த முதல்வர் பழனிசாமி, திறந்த வேனில் நின்றபடி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தொடர்ந்து தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசிவந்ததால் சிறிது தொண்டை கம்பி பேசமுடியாமல் சிரமப்பட்டார். பின்னர் தண்ணீர் குடித்த முதல்வர் பழனிசாமி தொண்டை மங்கிப் போச்சு, அதனால் பேச்சு வரல என்றார்.