ஓட்டலுக்கு சென்று மிரட்டி ஓசியில் சாப்பிடும் திமுகவினர் 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் கோரப்பசியில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் பரப்புரையை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் கட்சி சார்பில் அங்கு போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதல்வர், ”இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால்தான் நம் மாநிலம் அமைதி பூங்காவாக இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் பொதுக்கூட்டங்களில் நொடர்ந்து அதிமுகவை பற்றியும் தமது கூட்டணியை பற்றியும் அவதூறு பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். என்னை பொய் விவசாயி என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் என்னை மட்டும் இல்லை விவசாயிகளை கொச்சைப்படுத்தி வருகின்றார்.
தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் ஊழலை மட்டுமே செய்து வந்தார். தற்போது உள்ள தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பாக பணியாற்றி 100-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார். தமிழக முதல்வராக கருணாநிதி என்று வந்தரோ அன்று முதலே ஊழல் பிறந்து விட்டது.
திமுக என்றாலே ரவுடி கட்சி அராஜக கட்சி அடாவடி பண்ணுகின்ற கட்சி. இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கை பேணி காப்பதில் முதலிடம் தமிழகம் தான். தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. பரோட்டா, பிரியாணி சாப்பிட்டு காசு கேட்டால் உரிமையாளரை தாக்குபவர்கள் திமுகவினர். 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லலாதால் கோரா பசியில இருக்காங்க. ஆட்சிக்கு திமுக வந்தா விடமாட்டங்க” என்று பேசினார்.