டிரெண்டிங்

”ஒவ்வொரு கட்சிக்கும் தகுதி என்ற ஒன்று இருக்கிறதில்லையா?” -தேமுதிக குறித்து முதல்வர் பேச்சு

Sinekadhara

கூட்டணியிலிருந்து விலகியபிறகு ஒரு கட்சிமீது பழி சுமத்துவது தவறு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “தேமுதிக கட்சி பக்குவம் இல்லாமல் பேசி வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதி உள்ளது. அதற்கு ஏற்றாற்போல் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும். உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனித்து போட்டியிடுவதில் தவறில்லை. கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டு தவறாக பேசுவது நல்லதல்ல. கூட்டணியில் உடன்பாடு ஏற்படாமல் ஒரு கட்சியின் மீது பழி சுமத்துவது சரியல்ல” என்று கூறினார். 

அத்துடன் புதிய தமிழகம்தான் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக  கூறினார்.

<iframe width="716" height="403" src="https://www.youtube.com/embed/FVZ_PbQcf6E" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>