நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, " நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சம்மந்தப்பட்ட அமைச்சர்களும் டெல்லி சென்று இதுதொடர்பாக வலியுறுத்தி வருகின்றனர். அனுமதி பெறாமல் மனித சங்கிலி போராட்டம் நடந்தால் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.
விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த முதலமைச்சர், விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.